search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் இடம்"

    இந்தியாவில் பிறந்த இந்துஜா சகோதரர்களை பிரிட்டன் நாட்டின் முதல் கோடீஸ்வர குடும்பமாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.
    லண்டன்:
     
    பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

    2019-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 22 பில்லியன் பவுண்டுகள்  (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளனர்.

    இவர்களின் மேலும் இரு சகோதரர்களான பிரகாஷ் இந்துஜா(72) மற்றும் அசோக் இந்துஜா(67) ஆகியோர் லண்டன் மற்றும் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர்.

    பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, தகவல் தொடர்புத்துறை, ஊடகங்கள், வங்கிதுறை, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் இந்துஜா குமுமம் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது.

    இந்தியாவில் இவர்களுக்கு சொந்தமாக உள்ள அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் சமீபகாலமாக நல்ல வளர்ச்சியுடன் கைமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டு வருமானம், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு, இதர நிறுவனங்களின் பங்கு பத்திரங்களின் கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டன் நாட்டில் உள்ள ஆயிரம் செல்வந்தர்களை இந்த பத்திரிகை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.

    இவர்களுக்கு அடுத்தபடியாக கம்பளம் மட்டும் உலோக விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டேவிட் ரெயூபென் - சைமன் ரெயூபென் சகோதரர்கள் சுமார் 18.664 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

    2018-ம் ஆண்டுக்கான இதே பட்டியலில் 21.05 பில்லியன்பவுண்டுகள் மதிப்புள்ள சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்திருந்த பிரபல ரசாயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் தற்போது மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார். 

    உலகில் உற்பத்தியாகும் 4 கார்களில் ஒன்றுக்கு தேவையான இரும்பை சப்ளை செய்யும் பிரபல தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டல்(67) கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டு 14.66 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இவர் பின்தங்கியுள்ளார்.
    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #ChennaiCorporation #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசில் கல்வி, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 வழி பசுமை சாலையை பொதுமக்கள் எதிர்க்கவில்லை. நான் விவசாயி என்பதால் எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் இந்த திட்டத்தை சில கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள். குறிப்பாக தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து துறையில் முந்தைய தி.மு.க.அரசு ரூ.6 ஆயிரம் கோடி கடனில் விட்டு விட்டு சென்றது. டெப்போக்களையும் அடமானம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எதற்கு எடுத்தாலும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டியது தானே?. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் மாற்றி, மாற்றி கேள்வி கேட்கிறார்கள். அதற்காகவே தினமும் 3 மணி நேரம் அனைத்து துறை தகவலையும் படித்து, அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்.

    மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்தால் உடனே ராஜினாமா செய் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு நாற்காலி ஆசை. நான் ஒன்றும் பிடித்து கொண்டு இல்லை, மக்களாலும், ஒவ்வொரு தொண்டர்களாலும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் நான்கு வழிச்சாலைகளாக 40 சாலைகள் அமைக்க மத்தியஅரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 19 சாலைகளுக்கு அனுமதி கிடைத்து விட்டது. 21 சாலைகள் பரிந்துரையில் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்தால் அமெரிக்காவிற்கு இணையாக தமிழகம் மாறிவிடும்.

    எனது உறவினர் டெண்டரில் ஊழல் செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அத்தனையும் பொய். சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து டெண்டர்களும் விடப்படுகிறது. தி.மு.க. ஒரே நாளில் ஒருவருக்கு 8 முறை டெண்டர் கொடுத்துள்ளனர். தி.மு.க.வினரே ஊழலிலே பிறந்து ஊழலிலே திளைத்தவர்கள். திருப்பதி கோவிலில் அணைகள் எல்லாம் நிரம்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தற்கு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது மேட்டூர் அணை ஒரே மாதத்தில் நிரம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.

    வழக்கு முடிவு பெறும் நிலையில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலை உள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க கட்சியினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் குறைந்தது 25 விண்ணப்பங்கள் சேர்க்க வேண்டும். நிறைய விஷயம் (தி.மு.க.) பற்றி சொல்ல வேண்டியுள்ளது. தடுமாற்றத்திலும், துக்க நேரத்தில் இருப்பதாலும் மனிதாபிமானத்தோடு பேசவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #ChennaiCorporation #EdappadiPalanisamy  #Tamilnews
    எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலங்களில் ஆந்திராவுக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக முதல் இடம் கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு 15-ம் இடம் கிடைத்து இருக்கிறது.
    புதுடெல்லி:

    நாட்டில் எளிதாக தொழில் தொடங்கி நடத்த உகந்த மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் ஆராய்ந்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

    கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குதல், தொழிலாளர்கள் நலன், சுற்றுச்சூழல் ஒப்புதல், தகவல் பெறும் வசதி, நிலம் கையிருப்பு, ஒற்றைச்சாளர முறையில் விரைவான அனுமதி உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆந்திரா முதல் இடம் பிடித்து உள்ளது. 2-ம் இடத்தில் தெலுங்கானா மாநிலம் உள்ளது. முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டுக்கு இடம் இல்லை.

    3-ம் இடம் அரியானா, 4-ம் இடம் ஜார்கண்ட், 5-ம் இடம் குஜராத், 6-ம் இடம் சத்தீஷ்கார், 7-ம் இடம் மத்திய பிரதேசம், 8-ம் இடம் கர்நாடகம், 9-ம் இடம் ராஜஸ்தான், 10-ம் இடம் மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு கிடைத்து உள்ளது.

    தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்து உள்ளது.

    டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு 23-வது இடம். கடைசி இடம் மேகாலயாவுக்கு கிடைத்து இருக்கிறது. 
    ×